search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் வெற்றி பெறுவோம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி நம்பிக்கை
    X

    ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் வெற்றி பெறுவோம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி நம்பிக்கை

    குவாலிபையர் 2 போட்டியில் நாங்கள் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி பெறுவோம் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது.

    ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 114 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. கார்த்திக் அதிகபட்சமாக 26 பந்தில் 33 ரன்னும் (3பவுண்டரி, 1 சிக்சர்), அந்தோணி தாஸ் 17 பந்தில் 27 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அதிசயராஜ் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் ஆகாஷ் சும்ரா, அஸ்வின் கிறிஸ்ட் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 36 பந்தில் 73 ரன்னும் (8 பாண்டரி, 4 சிக்சர்), அபினவ் முகுந்த் 27 பந்தில் 33 ரன்னும் (4 பாண்டரி) எடுத்தனர்.

    தோல்வி அடைந்தாலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது.

    கோவை-காரைக்குடி காளை அணிகள் இன்று மோதும் போட்டியில் வெல்லும் அணியுடன் ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதும். இந்த ஆட்டம் நெல்லையில் நாளை மறுநாள் நடக்கிறது.

    தூத்துக்குடி அணியிடம் தோற்றது குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பயிற்சியாளர் ஹேமங் பதானி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டம் என்பதால் நெருக்கடி அதிகம். இந்த சமயத்தில் பெரிய ஸ்கோரை குவிப்பதே சிறந்ததாக இருக்கும். இதனால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன்.

    ஆனால் நாங்கள் சில மோசமான ஷாட்களை அடித்தோம். தூத்துக்குடி அணி வீரர்களின் பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. 130 முதல் 140 ரன் வரை எடுத்து இருந்தால் போட்டியை கடுமையாக்கி இருக்கலாம். நல்ல பார்ட்னர்ஷிப்பு களம் அமையவில்லை. கார்த்திக் அல்லது அந்தோணி தாஸ் இன்னும் சிறிது நேரம் ஆடி இருந்தால் கூடுதல் ரன்களை பெற்று இருப்போம்.

    நாங்கள் 2-வது ஓவரிலேயே சாய்கிஷோரை கொண்டு வந்தோம். தொடக்கத்திலேயே அவர்களது சில விக்கெட்டுகளை எடுத்து இருந்தால் ஆட்டம் சிறப்பாக இருந்து இருக்கும். வாஷிங்டன் சுந்தர் மிகவும் அபாரமாக ஆடினார். எதிர் அணிகளுக்கு அவர் எப்போதுமே சவாலாக இருந்து வருகிறார்.

    இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தது. ஆனால் மற்ற அணிகளுக்கு எதிராக நாங்கள் நன்றாகவே ஆடி உள்ளோம். ‘குவாலிபையர் 2’ போட்டியில் நாங்கள் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×