search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்னர் கழுத்தை தாக்கிய பவுன்சர் பந்து: ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்
    X

    வார்னர் கழுத்தை தாக்கிய பவுன்சர் பந்து: ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்

    பயிற்சி ஆட்டத்தில் ஹசில்வுட்டின் பவுன்சர் பந்து வார்னர் கழுத்துப் பகுதியை பலமாக தாக்கியது. இதனால் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
    ஆஸ்திரேலியாவில் உள் டார்வின் நகரில் இன்ட்ரா-ஸ்குவார்டு போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் துணைக் கேப்டன் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் பங்கேற்றனர்.

    வார்னருக்கு எதிரணியில் ஹசில்வுட் இடம்பிடித்திருந்தார். ஹசில்வுட் வீசிய பவுன்சர் பந்தை வார்னர் ‘குக் ஷாட்’ அடிக்க முயன்றார். அப்போது பேட் அவரது பேலன்ஸ் தவறி கையில் இருந்து விலகியது. அதே சமயத்தில் பவுன்சர் பந்து வார்னரின் கழுத்துப் பகுதியை பலமாக தாக்கியது. இதனால் வார்னர் நிலைகுலைந்தார்.

    முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வார்னர் போட்டியில் இருந்து வெளியேறினார். முதல் இன்னிங்சில் 4 ரன்கள் எடுத்திருந்த வார்னர், வார்னர் 2-வது இன்னிங்சில் 14 பந்திற்கு 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

    ஆகஸ்ட் 27-ந்தேதி வங்காள தேசம் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இதற்காக வரும் வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலிய அணி வங்காள தேசம் புறப்படுகிறது.
    Next Story
    ×