என் மலர்
செய்திகள்

நாளை 2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் அதிரடியாக விளையாடுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 304 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது.
முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இலங்கையை சந்திக்கிறது.
காலே டெஸ்டில் தொடக்க வீரர்கள் தவான், அபினவ் முகுந்த் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். தவான் முதல் இன்னிங்சில் 190 ரன்னும், முகுந்த் 2-வது இன்னிங்சில் 84 ரன்னும் எடுத்து இருந்தனர். கே.எல்.ராகுல் உடல் தகுதி பெற்றுவிட்டார்.
இதனால் நாளைய டெஸ்டில் தொடக்க வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்குமா? அல்லது அதே அணி நீடிக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அபினவ் முகுந்த் நீக்கப்படுவார். மற்றபடி வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
இதேபோல கேப்டன் விராட் கோலி, புஜாரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இருவரும் முதல் டெஸ்டில் சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தனர்.
புஜாராவுக்கு நாளைய போட்டி 50-வது டெஸ்ட் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் அவர் 4 ஆயிரம் ரன் என்ற இலக்கை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ரகானே, ஹார்த்திக் பாண்டியா, விருத்திமான் சகா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி சிறப்பான நிலையில் உள்ளனர். பலவீனமான இலங்கையை வீழ்த்தி முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.
காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத இலங்கை கேப்டன் சன்டிமால் நாளைய போட்டியில் இடம் பெறுகிறார். இதேபோல திரிமானேயும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இருவரது வருகையால் அந்த அணி பேட்டிங்கில் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உபுல் தரங்கா, கருணா ரதனே, குணதில்கா, ஹெராத், பெர்னாண்டோ போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர். முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய இலங்கை வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.

இரு அணிகளும் நாளை மோதும் போட்டி 40-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 39 போட்டியில் இந்தியா 17-ல், இலங்கை 7-ல் வெற்றி பெற்றுள்ளன. 15 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
நாளைய போட்டி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. டென் டெலிவிஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரு அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், அபினவ் முகுந்த், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்டியா, விருத்திமான் சகா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ராகுல், ரோகித் சர்மா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா.
இலங்கை: சன்டிமால் (கேப்டன்), உபுல் தரங்கா, கருணா ரதனே, குணதில்கா, கவுசல் மெண்டீஸ், மேத்யூஸ், டிக்வெலா, தில்ருவன் பெரைரா, ஹெராத், பிரதீப், குஷால் பெரைரா, குணரதனே, திரிமானே, தனஞ்செயன் டிசில்வா, லகிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, நுவீன் பிரதீப், புஷ்பக் குமாரா, சண்டகன்.

Next Story