search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் தொடக்க ஜோடிகள்: மாற்றுமா இந்தியா?
    X

    இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் தொடக்க ஜோடிகள்: மாற்றுமா இந்தியா?

    இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க தொடக்க ஜோடிகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியா இந்த மோசமான சாதனை மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
    ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். ஏனெனில், புதிய பந்தில் அதிக அளவில் ஸ்விங், வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். இதை எதிர்த்து விளையாடுவது மிகவும் சிரமம்.

    அதேவேளையில் ஆசிய மண்ணில் தொடக்க வீரர்களுக்கு பெரிய சவால் இருக்காது. ஆனால் இலங்கையில் தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து திணறி வருகிறார்கள். இங்குள்ள தட்பவெட்ப நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு அதிக அளவில் எடுபடுகிறது. இதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.

    கடந்த 2011 முதல் 2016 வரை தொடக்க ஜோடிகளின் சராசரி 25.11. மற்ற நாடுகளை விட இது மிகவும் குறைவானது. இந்த காலக்கட்டத்தில் 107 தொடக்க ஜோடிகள் களம் இறங்கியுள்ளது. இதில் 2012-ம் ஆண்டு கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்தின் குக் - ஸ்டாரஸ் ஜோடி 122 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும். மற்ற எந்த ஜோடியும் சதம் காணவில்லை.

    ஒன்றிரண்டு ஜோடிகள் 90 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ஆனால் 44 ஜோடிகள் 10 ரன்களை தாண்டியது கிடையாது. இதில் 12 ஜோடிகள் ரன் கணக்கை தொடங்கியது கிடையாது.



    2015 ஜூலை முதல் ஆகஸ்ட் 2016 வரை 34 ஜோடிகளில் 22 ஜோடிகள் இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை. ஒரு ஜோடி மட்டுமே 50 ரன்களை தாண்டியது. சராசரி 9.44 மட்டுமே.

    கடந்த முறை இந்தியா இலங்கை சுற்றுப் பயணம் சென்றிருந்த போது, இலங்கை அணி 6 இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா 35 ரன்கள்தான். 12 இன்னிங்சில் அதிகபட்ச தொடக்க ஜோடியின் ரன்கள் 12.

    தற்போது இரண்டு அணிகளும் இந்த மோசமான சாதனையை மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளன. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் தொடக்க ஜோடியின் ரன்கள் குவிப்பு அமையும். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி காலே மைதானத்தில் 26-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×