search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் வெஸ்லே, மாலன் சேர்ப்பு
    X

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் வெஸ்லே, மாலன் சேர்ப்பு

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வெஸ்லே, மாலன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. 3-வது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேரி பேலன்ஸ் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக எசக்ஸ் அணிக்காக விளையாடி வரும் டாம் வெஸ்லே சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் கடந்த 6 இன்னிங்சில் மூன்று சதம் அடித்துள்ளார். இலங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக 106 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதங்களும் விளாசியுள்ளார்.

    மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடி வரும் டேவிட் மாலன் 13 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கூடுதல் பேட்ஸ்மேன் உடன் இங்கிலாந்து விளையாட விரும்பினால் மாலனுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாலன் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 44 பந்தில் 78 ரன்கள் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×