என் மலர்
செய்திகள்

டோனியின் ஆட்டம் குறித்த கேள்விக்கு கோலியின் நறுக் பதில்
டோனியின் ஆட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி நறுக் என பதில் அளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்னர், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் உடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் டோனி மிகவும் மந்தமாக விளையாடினார். அவர் 114 பந்தில் 54 ரன்கள் சேர்த்தார். இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும் விராட் கோலி, தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சொதப்பினார்கள்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
தொடரை கைப்பற்றிய பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது டோனியின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
டோனி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விராட் கோலி பேசுகையில் ‘‘டோனி சிறப்பாக பந்தை எதிர்கொண்டு வருகிறார். கடினமான சூழ்நிலையில் எப்படி விளையாட வேண்டும், இன்னிங்சை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து அவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

டோனி வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை என்று கூறக்கூடாது. விளையாடுவதற்கு எப்படிபட்ட ஆடுகளம் தருகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். வலைப்பயிற்சியின்போது இரண்டு நாட்களாக நான் சுழற்பந்தில் பயிற்சி எடுத்தேன். ஆனால், போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடியவிலலை. ஏனென்றால், ஆடுகளம் ஸ்ட்ரோக் வைத்து விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. பயிற்சியை வைத்து ஒருவரும் பேட்டிங் பார்ஃம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. ஏனென்றால், போட்டியில் விளையாடுவதற்கு எப்படிபட்ட ஆடுகளம் கொடுக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
பவுன்சர் பந்து நமக்கு சரியாக வரவில்லை என்றால், பந்தை தடுத்து விளையாடுவதிலும், ஸ்ட்ரைக்கை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். 4-வது போட்டியில் மட்டும் டோனி அவ்வாறு செய்யவில்லை என்று நினைக்கிறேன். அதற்கு முன் 70 மற்றும் 80 ரன்கள் அடித்துள்ளார்.
ஒரு போட்டியில் விளையாடாவிட்டால் உடனே நாம் பொறுமை இழக்கிறோம். ஆடுகளத்தில் விளையாடும் எந்தவொரு பேட்ஸ்மேனும் தடுமாறுவது நடக்கக்கூடிய விஷயம்தான். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் கூட அது நடக்கும். டோனியை பற்றி நான் எந்த கவலையும் அடையவில்லை. அவர் பந்தை சிறப்பாக எதிர்கொள்கிறார். ஸ்ட்ரைக் ரேட்டும் 100 அருகில் உள்ளது. அதனால் எதையும் பற்றி கவலையடைய வேண்டாம்’’ என்றார்.

Next Story