search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஷில் குமாரை எப்படி தேசிய கண்காணிப்பாளராக நியமிக்கலாம்: நர்சிங் யாதவ் கேள்வி
    X

    சுஷில் குமாரை எப்படி தேசிய கண்காணிப்பாளராக நியமிக்கலாம்: நர்சிங் யாதவ் கேள்வி

    ஒலிம்பிக் பதக்கம் புகழ் சுஷில் குமாரை எப்படி மல்யுத்த விளையாட்டின் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் என்று நர்சிங் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் மல்யுத்த போட்டியின் தேசிய கண்காணிப்பாளரான ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வாங்கிய சுஷில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த பதவியில் சுஷில் குமார் நீடித்தால் அவர் இரட்டை ஆதாயம் பெறும் நிலை ஏற்படும் என்று கேள்வி எழுப்பிய நர்சிங் யாதவ், இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று எழுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.



    நர்சிங் யாதவ் தனது கடிதத்தில் குறிபிட்டுள்ளதாக இந்திய மல்யுத்த பெடரேசன் அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் ‘‘நர்சிங் யாதவ் மத்திய அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுத்தியுள்ளார். அதில் சுஷில் எப்படி தேசிய கண்காணிப்பாளரான நியமிக்கப்பட்டார் என்பது குறித்து கடிதம் எழுத்தியுள்ளார். அவரது மாமா சத்ராசல் மைதானத்தில் உள்ள அகாடாவில் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சாதகமாக சுஷில் குமார் செயல்பட வாய்ப்புள்ளது.

    தேசிய கண்காணிப்பாளர் ஒருவர் அகாடாவில் உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும்போது அது இரட்டை ஆதாயம் பெறுதல் ஆகும்’’ என்று எழுதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×