search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன்: 20-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வீனஸ் வில்லியம்ஸ்
    X

    பிரெஞ்ச் ஓபன்: 20-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வீனஸ் வில்லியம்ஸ்

    டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தி வரும் வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரான வீனஸ் வில்லியம்ஸ் 20-வது வருடம் பிரெஞ்ச் ஓபனில் அடியெடுத்து வைக்கிறார்.
    டென்னிஸ் அரங்களில் தங்களுக்கென்று தனி முத்திரை படைத்தவர்கள் வில்லியம்ஸ் சகோதரிகள். இதில் மூத்தவர் வீனஸ் வில்லியம்ஸ். அடுத்த மாதம் 17-ந்தேதி வந்தால் அவருக்கு 37 வயது பூர்த்தியாகும்.

    வீனஸ் வில்லியம்ஸ் 1994-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தனது 14 வயதில் தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, 1997-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி டென்னிஸின் மிகப்பெரிய தொடரான கிராண்ட்ஸ்லாம் தொடரின் பிரெஞ்ச் ஓபன் தொடருக்கான மெயின் வரைவில் இடம்பிடித்தார். இந்த தொடரில் 2-வது சுற்று வரை முன்னேறினார்.

    அதன்பின் 2011-ம் ஆண்டைத்தவிர மற்ற எல்லா ஆண்டும் தொடர்ந்து பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொண்டு வருகிறார். இன்று பிரெஞ்ச் ஓபன் தொடங்கியது. இது அவருக்கு 20-வது தொடராகும். இதன்மூலம் பிரெஞ்ச் ஓபனில் தனது 20-வது வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.

    வீனஸ் வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் சீனாவின் வாங் குயியாங்கை எதிர்கொள்கிறார். வீனஸ் வில்லியம்ஸ் பிரெஞ்ச் ஓபனை வென்றது கிடையாது. 2002-ல் மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இரண்டு முறை (1999, 2010) வென்றுள்ளார்.
    Next Story
    ×