search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை 189 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா
    X

    பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை 189 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா

    பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 189 ரன்னில் சுருண்டது. ஷமி, பு.குமார் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி மார்ட்டின் கப்தில், ரோஞ்சி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    கப்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 8 ரன்னிலும், ப்ரூம் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் மொகமது ஷமி வீழ்த்தினார்.

    ஆனால் மறுமுனையில் ரோஞ்சி அதிரடியாக விளையாடினார். இதனால் பவர்பிளே-ஆன முதல் 10 ஓவரில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் குவித்தது. ரோஞ்சி 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார். அதன்பின் நியூசிலாந்தின் ரன்விகிதம் குறைய ஆரம்பித்தது.


    அரைசதம் அடித்த நியூசிலாந்து தொடக்க வீரர் ரோஞ்சி

    கோரி ஆண்டர்சன் 10 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் போல்டானார். சான்ட்னெர் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் அவுட்டாக, கிராண்ட்ஹோம்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் ஜடேஜா.

    மில்னே 9 ரன்னிலும், சவுத்தி 4 ரன்னிலும், போல்ட் 9 ரன்னிலும் அவுட் ஆக 8-வது வீரராக களம் இறங்கிய நீசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, நியூசிலாந்து 38.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நீசம் 46 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.


    2 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜடேஜா

    இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 8 ஓவரில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 6.4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×