search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து கோப்பையை வெல்லும் - லாரா
    X

    சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து கோப்பையை வெல்லும் - லாரா

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் உலகின் ‘டாப் 8’ நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்தப்போட்டியில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இதுவரை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியை விட இந்த முறை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் அனைத்து அணிகளும் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.

    சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு கூடுதல் பலமாகும். என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி 20 ஓவர் உலககோப்பையை இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்று கோப்பையை இழந்து இருந்தது. ஆனால் தற்போது அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர்.



    போத்தம், பிளின்டாப் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தவர்கள். ஆனால் தற்போது ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியிலும் அபாரமாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் வியக்கதக்க வீரர்கள் உள்ளனர்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சாம்பியன்ஸ் டிராபியை (2004) வென்றது மறக்க இயலாது. தற்போதுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தரவரிசை காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

    இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இதுவரை சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இல்லை. 2004-ல் வெஸ்ட் இண்டீசிடமும், 2013-ல் இந்தியாவிடம் தோற்று அந்த அணி கோப்பையை இழந்து இருந்தது.
    Next Story
    ×