search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் லீக்: ஹம்ப்ஷைர் அணிக்கு திரும்புகிறார் ஷாகித் அப்ரிடி
    X

    இங்கிலாந்து நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் லீக்: ஹம்ப்ஷைர் அணிக்கு திரும்புகிறார் ஷாகித் அப்ரிடி

    பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷாகித் அப்ரிடி ‘டி20 பிளாஸ்ட்’ லீக் தொடரில் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடுகிறார்.
    பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. சமீபத்தில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் தொடர்ந்து டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார்.

    இங்கிலாந்தில் நடத்தப்படும் ‘டி20 பிளாஸ்ட்’ லீக்கில் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடுகிறார். 2016-ம் ஆண்டு இதே அணியில் இடம்பிடித்திருந்த அப்ரிடி இடையிலேயே வெளியேறினார். அந்த அணி சவுத் குரூப்பில் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தை பிடித்தது. அப்ரிடி 12 போட்டிகளில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.



    இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி தொடங்க உள்ள டி20 பிளாஸ்ட் லீக்கில் விளையாடுவதற்காக ஹம்ப்ஷைர் அணிக்கு அப்ரிரி திரும்புகிறார்.

    ‘‘கடந்த சீசனில் எங்களது அணியின் வெற்றிக்கு அப்ரிடி உறுதுணையாக இருந்தார். அவரது திறமை இந்த சீசனில் எங்களது அணிக்கு சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் உணர்கிறோம்’’ என்று ஹம்ப்ஷைர் அணியின் இயக்குனர் ஜைல்ஸ் ஒயிட் கூறியுள்ளார்.
    Next Story
    ×