search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி.யின் வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை தக்க வைத்தது இந்தியா
    X

    ஐ.சி.சி.யின் வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை தக்க வைத்தது இந்தியா

    ஐ.சி.சி. வெளியிட்டுள்ள வருடாந்திர டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 117 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    ஐ.சி.சி. ஒவ்வாரு வருடமும் மே மாதம் வருடாந்திர தரவரிசையை வெளியிடும். இதில் டெஸ்ட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் இந்தியா 1 புள்ளிகள் கூடுதலாக பெற்று 123 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று 117 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன் இந்தியா தென்ஆப்பிரிக்கா இடையே 13 புள்ளிகள் இடைவெளி இருந்தது. தற்போது இது 6 புள்ளியாக குறைந்துள்ளது.



    ஆஸ்திரேலியா 108 புள்ளியில் இருந்து 100 புள்ளிக்கு சரிந்து 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டு புள்ளிகள் சரிந்து 99 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகள் சரிந்த பாகிஸ்தான் 93 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    இலங்கை 91 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 75 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், வங்காள தேசம் 69 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது. ஜிம்பாப்வே புள்ளிகள் ஏதும் பெறாமல் 10-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×