search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: முதல் இடத்திற்கு ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி- வெல்வது யார்?
    X

    லா லிகா: முதல் இடத்திற்கு ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி- வெல்வது யார்?

    லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர் லா லிகா. இதில் கலந்து கொள்ளும் அணி மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

    தற்போது ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு அணிகளும் 81 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் நேற்று நள்ளிரவு ரியல் மாட்ரிட் கிரேனடா அணியையும், பார்சிலோனா வில்லாரியல் அணியையும் எதிர்கொண்டன.

    ரியல் மாட்ரிட் 4-0 என கிரேனடாவை வீழ்த்தியது. பார்சிலோனா 4-1 என வில்லாரியலை வீழ்த்தியது. இதன்மூலம் இரு அணிகளும் 84 புள்ளிகள் பெற்றுள்ளது. அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள் மூலம் பார்சிலோனா முதல் இடத்தில் உள்ளது.



    பார்சிலோனா அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது. ரியல் மாட்ரிட் அணிக்கு மூன்று போட்டிகள் உள்ளன. இரண்டு போட்டிகளில் பார்சிலோனாவிற்கு என்ன முடிவு கிடைக்கிறதோ, அதே முடிவுடன் ரியல் மாட்ரிட் கடைசி போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

    மாறாக எதாவது ஒரு போட்டியில் ரியல் மாட்ரிட் தோற்று, மற்ற இரண்டு போட்டிகளிலும் பார்சிலோனா அணியின் முடிவைபோல் ரியல் மாட்ரிட் பெற்றால் இரு அணிகளும் சம புள்ளிகள் பெறும். கோல்கள் அடிப்படையில் பார்சிலோனா வெற்றிபெறும். இதனால் இரு அணிகளும் சாம்பியன் பட்டம் பெற மல்லுக்கட்டியுள்ளது.
    Next Story
    ×