search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    X

    ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற புனே அணி கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் நரேன் முதல் ஓவரின் 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாட முற்பட்ட கம்பீர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். காம்பீரை தொடர்ந்து ஜாக்சன்(10), யூசப் பதான்(4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இருப்பினும், மணிஷ் பாண்டே 37 (32), டி கிரண்ட் ஹோம் 36 (19), சூர்ய யாதவ் 30 (16) சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது.

    புனே அணி தரப்பில் உனகண்ட் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் 2 ஓவர்கள் மட்டும் வீசி 2 விக்கெட்டுகளை  கைப்பற்றினார்.

    இதனையடுத்து 156 என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திருப்பதி மற்றும் ரஹானே பேட்டிங் செய்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய திருப்பதி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். இவரை கட்டுப்படுத்த கொல்கத்தா பவுலர்கள் திணறினர். 11 ரன்களில் ரஹானே வெளியேறினாலும் திருப்பதி நின்று ரன்களை குவித்தார்.

    கேப்டன் ஸ்மித் 9 ரன்களுடனும், மனோஜ் திவாரி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடந்த போட்டியில் சதமடித்த ஸ்டோக்ஸ் 14 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய தோனி 5 ரன்களில் வெளியேறி இம்முறையும் சொதப்பினார். பின் வரிசை வீரர்கள் திருப்பதிக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க, 19.2 ஓவர்களில் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திருப்பதி 52 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களில் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
    Next Story
    ×