search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை பழிதீர்க்குமா குஜராத்?
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை பழிதீர்க்குமா குஜராத்?

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள குஜராத் லயன்ஸ் அணி மோதுகிறது.
    8 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ள குஜராத் லயன்ஸ் அணிக்கு முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்ததால் நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஆரோன் பிஞ்ச், பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ‘ஹாட்ரிக் விக்கெட்’ நாயகன் ஆண்ட்ரூ டை, ரவீந்திர ஜடேஜா சரியான நேரத்தில் பார்முக்கு வந்திருப்பது குஜராத் அணிக்கு சாதகமான அம்சமாகும். சொந்த ஊரில் களம் காணுவதால் கூடுதல் உற்சாகத்துடன் ஆடுவார்கள்.

    தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக்கில் புனேயிடம் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழும் மும்பை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வரிந்து கட்டி நிற்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.

    குஜராத் அணி ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்று இருக்கிறது. அந்த தோல்விக்கு பழிதீர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    Next Story
    ×