search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறந்த தலைவரை நினைவுகூர்வோம்: எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் மம்தா டுவிட்
    X

    சிறந்த தலைவரை நினைவுகூர்வோம்: எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் மம்தா டுவிட்

    எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். #MGRBirthAnniversary
    கொல்கத்தா:

    தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தும், படங்களை அலங்கரித்து வைத்தும் தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

    எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் எம்.ஜி.ஆரை புகழ்ந்து கருத்து பதிவு செய்துள்ளார். 

    ‘சிறந்த தலைவரும் திரைப்பட நட்சத்திரமுமான எம்.ஜி.ராமச்சந்திரனை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம்’ என்று மம்தா டுவிட் செய்துள்ளார்.

    எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் உள்ள முக்கிய காட்சிகளை வீடியோவாகத் தொகுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். #MGRBirthAnniversary #tamilnews

    Next Story
    ×