search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்: ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
    X

    ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்: ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது

    தமிழ்நாட்டில் உடன்குடியில் ரூ.7,300 கோடி செலவில் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கான பணி ஆணையை ‘பெல்’ நிறுவனம் பெற்றது.
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அதிநவீன மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. இது, ரூ.7 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும்.

    தலா 660 மெகாவாட் வீதம் மொத்தம் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அதிநவீன அனல் மின் நிலையங்கள் அங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கான பணி ஆணையை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

    இதுபோன்ற அதிநவீன மின் உற்பத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை ‘பெல்’ நிறுவனத்திடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்குவது, கடந்த 3 ஆண்டுகளில் இது 4-வது முறை ஆகும்.

    இந்த ஒப்பந்தத்தின்படி, உடன்குடியில், தலா 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அதிநவீன அனல் மின் நிலையங்களை ‘பெல்’ நிறுவனம் அமைக்கும். என்ஜினீயரிங், கொள்முதல், கட்டுமானம் (இ.பி.சி.) அடிப்படையில், இந்த திட்டத்தை நிறைவேற்றும்.

    இந்த திட்டம், தமிழ்நாடு வளர்ச்சி அடைவதற்கு துணைபுரிவதுடன், தமிழக மக்களுக்கு எளிதில் மின்சாரம் கிடைப்பதற்கு பேருதவியாக அமையும் என்று கருதப்படுகிறது.
    Next Story
    ×