search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடர்பான நடவடிக்கையில் 2022-க்குள் சாதகமான பலன்: பிரதமர் வலியுறுத்தல்
    X

    ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடர்பான நடவடிக்கையில் 2022-க்குள் சாதகமான பலன்: பிரதமர் வலியுறுத்தல்

    குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஊட்டச்சத்து தொடர்பான நடவடிக்கையில் 2022-க்குள் சாதகமான பலன் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நிதி ஆயோக் மற்றும் மற்ற துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறார்கள் சந்தித்து வரும் ஊட்டச்சத்து பற்றாக்குறை, எடை குறைவாக பிறத்தல் மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

    அப்போது பிரதமர் மோடி பேசுகையில், குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட 
    பிரச்சினைகளை நீக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நடவடிக்கையில் சாதகமான பலன்கள் கிடைக்க வேண்டும்.

    மேலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளை நீக்க மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளை ஊடகங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
    Next Story
    ×