search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பத்மாவதி’ படத்துக்கு வசுந்தரா ராஜே எதிர்ப்பு: மத்திய மந்திரி இரானிக்கு கடிதம்
    X

    ‘பத்மாவதி’ படத்துக்கு வசுந்தரா ராஜே எதிர்ப்பு: மத்திய மந்திரி இரானிக்கு கடிதம்

    தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவதி’ படத்துக்கு ராஜஸ்தன் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ‘பத்மாவதி’ திரைப்படத்தை எடுத்துள்ளார். இதில் பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

    இந்த படத்தில் ராணி பத்மினி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜபுத்ர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தை திரையிடக் கூடாது தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனே, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு ராஜபுத்ர கர்னி சேனா அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பத்மாவதி படத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் பலர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், திரைப்படமாக எடுக்கும் போது வரலாற்று உண்மைகளை சிதைத்து விடக்கூடாது என்றார்.



    இந்த நிலையில் ராஜ புத்ரர்களின் கோரிக்கைக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நேற்று இது தொடர்பாக அவர் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது.

    அதில், பத்மாவதி படத்தில் ராஜ புத்ரர்களை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    எனவே ராஜ புத்ரர்களின் உணர்வுகளை புண்படுத்தாத வகையில் படம் எடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே பத்மாவதி படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×