search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எமரால்டு கப்பலில் மீட்கப்பட்ட உடல் இந்தியருடையதா? தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட சுஷ்மா
    X

    எமரால்டு கப்பலில் மீட்கப்பட்ட உடல் இந்தியருடையதா? தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட சுஷ்மா

    பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய எமரால்டு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல் இந்தியருடையதா என மணிலாவில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் சுஷ்மா சுவராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய எமரால்டு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல் இந்தியருடையதா என மணிலாவில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் சுஷ்மா சுவராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.

    ஹாங்காங் பகுதியை சேர்ந்த 33 ஆயிரம் டன் எடையுள்ள அந்த சரக்கு கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக சென்றபோது புயலில் சிக்கி, பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் கடந்த மாதம் நீரில் மூழ்கியது.

    கப்பலில் இருந்த 26 இந்தியர்களில் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 10 இந்தியர்களை தேடும் பணியில் ஜப்பான் நாட்டு கடலோரக் காவல் படையை சேர்ந்த இரு ரோந்துப் படகுகள் மற்றும் மூன்று விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டன.

    இந்நிலையில், எமரால்டு கப்பலில் இருந்து நேற்று ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது. அது அழுகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மணிலாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அந்த உடல் இந்தியருடையதா டி.என்.ஏ சோதனை நடத்தும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
     
    மேலும், அவர் டுவிட்டரில் கூறுகையில், பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் காணாமல் போன இந்தியர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
     
    Next Story
    ×