search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் டாக்டர்கள் ஸ்டிரைக் : சிகிச்சை கிடைக்காமல் ஒரே நாளில் 13 பேர் பலி
    X

    பீகாரில் டாக்டர்கள் ஸ்டிரைக் : சிகிச்சை கிடைக்காமல் ஒரே நாளில் 13 பேர் பலி

    பீகார் மாநிலத்தில் இளநிலை டாக்டர்கள் செய்துவரும் வேலைநிறுத்த போரட்டத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே நாளில் 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த இளநிலை மருத்துவரை உயிரிழந்தவரின் உறவினர்களின் கடுமையாக தாக்கியுள்ளனர். இது கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற மூன்றாவது தாக்குதல் சம்பவம் ஆகும்.

    இதனால் இளநிலை டாக்டர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள 500க்கும் மேற்பட்ட இளநிலை டாக்டர்கள் நேற்றிலிருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 36 அறுவைசிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர். புதிதாக வரும் நோயாளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 



    இந்நிலையில், டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மூத்த டாக்டர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் எனவும், நோயாளிகளுக்கு நர்ஸ்கள் அவசர சிகிச்சை வழங்கி வருவதாகவும் பாட்னா மருத்துவமனையை சேர்ந்த ஒரு மூத்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் டாக்டர்களை இன்று பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மாநில சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பாண்டே அழைப்பு விடுத்துள்ளார்.
    Next Story
    ×