search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம்?: பரூக் அப்துல்லா, ரிஷி கபூர் மீது ஜம்மு கோட்டில் புகார்
    X

    காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம்?: பரூக் அப்துல்லா, ரிஷி கபூர் மீது ஜம்மு கோட்டில் புகார்

    காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என கருத்து தெரிவித்த பரூக் அப்துல்லா மற்றும் ரிஷி கபூர் மீது ஜம்மு கோட்டில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஜம்மு:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்னும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு பீகார், மணிப்பூர் முதல் மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதுதொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை போர் நடத்தினாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா சமீபத்தில் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் மணிப்பூர் முதல் மந்திரி நஜ்மா ஹெப்துல்லா உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பரூக் அப்துல்லாவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் ரிஷி கபூரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என குரல் எழுப்பி இருந்தார்.

    இந்நிலையில், ஜம்முவை சேர்ந்த சமூக ஆர்வலர் சுகேஷ் கஜூரியா என்பவர் பரூக் அப்துல்லா மற்றும் நடிகர் ரிஷி கபூர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டுமென ஜம்மு மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
    Next Story
    ×