search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி: ஏசியான் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார்
    X

    பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி: ஏசியான் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார்

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற உள்ள 25-வது இந்தியா - ஏசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புறப்பட்டுச்சென்றார்.
    புதுடெல்லி:

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா - ஏசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச்சென்றார். ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ள பிரதமர் மோடி, கிழக்கு ஆசிய நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் அமெரிக்காவும், சீனாவும் தங்களது வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. அதற்கு இணையாக இந்தியாவும் தனது நல்லுறவை பலப்படுத்தி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    36 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் செல்லும் இந்திய பிரதமர் என்ற பெயரை பிரதமர் மோடி பெறுகிறார். முன்னதாக, 1981-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார். அதன்பிறகு எந்த பிரதமரும் அங்கு செல்லவில்லை.
    Next Story
    ×