search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prime minister narendra modi"

    • தனது உரையில் இந்திய நீதித்துறையை மோடி புகழ்ந்து பேசினார்
    • தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததால் அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

    இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    2014ல் முதல் முறை பிரதமராக பதவியேற்றதில் தொடங்கி இவ்வருடம் 10-வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொடியேற்றம் முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் உரையை கேட்டனர்.

    அப்போது பேசிய பிரதமர் மாநில மொழியில் பாடத்திட்டங்களை அமைப்பது குறித்து தனது அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார். அத்துடன் நில்லாமல் இந்திய நீதித்துறையை புகழ்ந்து பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:

    "மாநில மொழிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தீர்ப்புகளில் உள்ள செயலாக்க பாகம் (operating part) இனி மாநில மொழிகளிலும் மக்களுக்கு கிடைக்கும். இதற்காக, இந்த பணியை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை கேட்டதும் விருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மனம் நெகிழ்ந்து மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை நோக்கி கும்பிட்டார். பின்னர் இது குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

    "ஜனவரி 26 குடியரசு தினத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தொடக்க நாளான ஜனவரி 28-ஐ கொண்டாடும் விதமாகவும் இந்த வருடம் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தொடங்கப்பட்டது. இதுவரை 9,423 தீர்ப்புகள் இந்திய மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் உட்பட 14 மொழிகள் அடங்கும். உச்ச நீதிமன்றம் தோன்றிய நாளிலிருந்து இதுவரை வழங்கப்பட்ட 35,000 தீர்ப்புகளும் விரைவில் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும். தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததனால் 99 சதவீத குடிமக்களுக்கு அவற்றை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மோடியின் பாராட்டும், அதற்கு தலைமை நீதிபதியின் நன்றி தெரிவித்தலும் காண்போரை பெருமையடைய செய்தது. இது சம்பந்தமான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம், பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தார். #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். இதன்மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என சமீபத்தில் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

    இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு காணப்படுகிறது. அதேநேரம் இந்த திட்டம் சாத்தியமில்லை என பொருளாதார வல்லுனர்களில் ஒரு சாராரும், சாத்தியமானதுதான் என மற்றொரு பிரிவினரும் கூறி வருகின்றனர்.

    இவ்வாறு நியாய் திட்டம் நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பி இருக்கும் நிலையில், இந்த திட்டம் குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ராகுல் காந்தி நேற்று விரிவான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் தற்போதுகூட 20 முதல் 22 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்கம் மற்றும் கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) திட்டங்களாலேயே இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் ஏராளம்.

    எங்களது நோக்கமே இந்தியாவில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதுதான். அதற்காகவே இந்த நியாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. வறுமைக்கு எதிரான கடைசி தாக்குதலே இந்த திட்டம் ஆகும்.

    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் செய்தது எல்லாம், பணமதிப்பு நீக்கம் மற்றும் கப்பார் சிங் வரியால் இந்திய பொருளாதாரத்தில் இருந்து அனைத்து பணத்தையும் அகற்றியதுதான். அமைப்புசாரா துறைகள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

    எங்கள் நியாய் திட்டத்தின் நோக்கம் 2 பிரிவானது. முதலில் இது 20 சதவீத பரம ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்கிறது. அடுத்ததாக பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்தும்.

    இந்த திட்டத்தின் பெயருக்கு (நியாய்) இந்தியில் ‘நீதி’ என்ற பொருள் உண்டு. கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்ட பிரதமர் மோடி, அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே அவர்களுக்கான நீதியாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தால் நாட்டின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என சில பொருளாதார வல்லுனர்கள் கூறுவது தவறு. இது தொடர்பாக ஏராளமான பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுனர்களிடம் விரிவாக ஆலோசித்த பின்னரே இதை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்தோம்.

    இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் அவசரம் காட்டமாட்டோம். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. போல நிபுணர்களிடம் ஆலோசிக்காமல் இந்த திட்டத்தை அமல்படுத்தமாட்டோம். இந்த திட்டம் குறித்து விரிவாக சோதித்து, ஆலோசித்து இருக்கிறோம். அந்தவகையில் நியாய் திட்டம் முற்றிலும் சாத்தியமான திட்டமே.

    இந்த திட்டம் முதலில் சோதனை ரீதியாக அமல்படுத்தி, பின்னர் அதில் ஏதாவது குறைகள் இருந்தால் அவற்றை களைந்துவிட்டு தேசிய அளவில் செயல்படுத்துவோம். மேலும் இதற்கான பயனாளர்களை கண்டறிவதிலும் வலுவான வழிமுறையை பின்பற்றுவோம். பயனாளர்கள் யாரையும் விடமாட்டோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan #DMK #Congress
    சென்னை :

    தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒட்டுமொத்தமாக மோடியின் புகழை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சி முடிந்து, மீண்டும் தொடர போகிறதே என்ற ஆதங்கத்திலும்தான் ரபேல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளன. எந்த தவறும் நடக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் நிரூபணம் ஆகியுள்ளது. பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளும், ராணுவ மந்திரியும் தெளிவாக விளக்கத்தை தந்து உள்ளனர்.

    நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்பவர்களை விடமாட்டேன் என்று மோடி கூறியுள்ளார். உண்மை எப்போதும் வெளியே வரும். அது பாரதீய ஜனதாவிற்கு சாதகமாக இருக்கும்.

    20 லட்சம் ஏழை மக்களின் பணத்தை சுருட்டிய சாரதா சீட் நிறுவனத்தில் மம்தா கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. மோடிக்கு மம்தாவின் நற்சான்று தேவையில்லை. எல்லாவிதத்திலும் ஊழல் ஒழிக்கப்பட்டு இருப்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

    டெண்டர்கள் எல்லாம் இ.டெண்டரில் நடக்கிறது. தொழில் முனைவர்கள் இடைத்தரகர் மூலம் சென்றால் தான் அனுமதி கிடைக்கும். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபின் நேரிடையாக சென்றாலே தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். இனிமேல் தான் ஊழலற்ற தன்மையின் இனிப்பை மக்கள் சுவைக்க போகிறார்கள். ஊழல் அரசியல் செய்தவர்களுக்கு இது கசப்பாகத்தான் இருக்கும். அதைத்தான் மம்தா போன்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.



    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான பிறகு அழகிரி, காங்கிரஸ் கட்சியைவிட பாரதீய ஜனதா மீதுதான் கவலைப்படுகிறார். ராகுலைவிட மோடி மீது அக்கறை காட்டுகிறார். காங்கிரஸ் கட்சியில் நிறைய கோ‌ஷ்டி இருக்கிறது. அழகிரி காங்கிரஸ் கட்சி வேலையை பார்த்தால் நன்றாக இருக்கும்.

    கையை அழுக்காக்கிக்கொள்ள போவதில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இப்போது கூட்டணி பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் யூகங்கள்தான். எந்த கூட்டணியும் முழுமையாக நிறைவடையவில்லை. பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஆனால் அவருடன் கூட்டணி, இவருடன் கூட்டணி என்பது யூகங்கள்தான்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க அனைத்து முயற்சிகளையும் பாரதீய ஜனதா செய்து வருகிறது.

    தங்கள் கூட்டணி பற்றி கவலைப்படாமல் அடுத்த கட்சிகளின் கூட்டணி பற்றி திருமாவளவன் கவலைப்படுகிறார். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. விரும்பவில்லை என்று சொல்வதற்கு இவர் யார்?. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள் பாரதீய ஜனதா கட்சி பற்றி சிந்திப்பது பாரதீய ஜனதா பலம் பெற்று வருகிறது என்றுதான் அர்த்தம்.

    கூட்டணிக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் கூட்டணி பற்றி தகவல் தரப்படும். திருப்பூரில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 8 பாராளுமன்ற தொகுதி கட்சியினர்தான் பங்கேற்கின்றனர். பாரதீய ஜனதா எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு மதுரையில் காட்டினோம். மீண்டும் திருப்பூரில் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #DMK #Congress
    சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக புதிய நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.#SikhGuruGobindSingh #PMModi
    புதுடெல்லி:

    சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் அம்மதத்தில் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழிநடத்தி வந்தனர். இவ்வகையில் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் 1708-ம் ஆண்டில் மறைந்தார். இவரது  பிறந்தநாளை கொண்டாடும் வகையில்  நினைவு நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடவுள்ளார்.

    இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், குரு கோபிந்த் சிங் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 



    கடந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற குரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது குரு கோபிந்த் சிங் நினைவு தபால் தலையினை வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், கல்சா பிரிவின் வாயிலாக குரு கோபிந்த் சிங், நாட்டை ஒருங்கிணைக்க மேற்கொண்ட தனித்துவமான முயற்சியை சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது. #SikhGuruGobindSingh #PMModi

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். #Instagram #WorldLeader #NarendraModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது பேஸ்புக் பக்கம் மூலம் 4 கோடிக்கும் அதிகமான விருப்பங்களை (லைக்) குவித்திருக்கும் அவர், தனது டுவிட்டர் தளத்தில் 4.3 கோடி பின்தொடர்பாளர்களையும் கொண்டிருக்கிறார்.

    இதைப்போல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி தீவிரமாக இயங்கி வருகிறார். இந்த பக்கத்தில் அவரை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக 1.22 கோடி பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ 2-வது இடத்தையும், 1 கோடி பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 3-வது இடத்தையும் பெற்று உள்ளனர்.

    முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோரை சந்தித்த படத்தை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த படம் அதிக விருப்பங்களை குவித்ததுடன், உலக தலைவர் ஒருவர் பதிவிட்டு அதிக விருப்பங்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.   #Instagram #WorldLeader #NarendraModi
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மூன்றாவது முறையாக பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #PMModi #Vajpayee
    புதுடெல்லி:

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 11-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 92 வயதான வாஜ்பாயை பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 10-15 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.


    இதற்கிடையே, பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூப்பு தொடர்பான தேசிய மையத்திற்கான அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே உள்ள சப்தர்ஜுங் மருத்துவமனையில் சிறப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை, அன்சாரி நகர் மற்றும் விபத்து முகாமிற்கு இடையே மோட்டார் சுரங்கப்பாதை வசதியை தொடங்கி வைத்தார்.  #PMModi #Vajpayee

    கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என கூறினார். #DigitalIndiaKiBaatPMKeSaath #DigitalIndia
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் வீடியோ போன் மூலம் இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி,

    டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கிராமங்களை, இளைஞர்களுடன் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இது கடந்த நான்கு ஆண்டுகளாக தனி மனிதனின் தேவையை எளிதாக பெற உதவுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் டிஜிட்டல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல டிஜிட்டல் இந்தியா பயனாளிகள் தங்கள் அனுபவத்தை தெரிவித்துள்ளனர்.


    இந்த தொழில்நுட்பங்கள் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் பதிவு செய்யலாம், கட்டணாம் செலுத்தாலம் மற்றும் பல சேவைகளை எளிதாக செய்ய இது உதவுகிறது. இந்த சேவை அனைத்து துறைகளிலும் உள்ளது. அதற்காக பொதுசேவை மையங்களை வலுப்படுத்த வேண்டும்.

    இந்தியாவில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அதிகரித்துள்ளது. தொழில்முனைவோர்கள் அதிகரித்துள்ளனர்.

    கிராமங்களில் இண்டெர்நெட் இணைப்பு அளிக்கப்பட்டதன் மூலம் பள்ளி மாணவர்கள் படிக்க மிகவும் வசதியாக உள்ளதாக பலர் தெரிவித்தனர். மேலும், வயதானவர்கள் தங்கள் பென்ஷன் பிரச்சனைகளை டிஜிட்டல் இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக சரிசெய்ய முடியும். பொருள் மற்றும் சேவை தொகையை எளிதாக செலுத்த வர்த்தகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பிகிம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #DigitalIndiaKiBaatPMKeSaath #DigitalIndia

    ×