search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெ.என்.யு. பல்கலைக்கழக வளாகத்தில் பிரியாணி சமைத்த மாணவர்களுக்கு ரூ  6 ஆயிரம் அபராதம்
    X

    ஜெ.என்.யு. பல்கலைக்கழக வளாகத்தில் பிரியாணி சமைத்த மாணவர்களுக்கு ரூ 6 ஆயிரம் அபராதம்

    ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பிரியாணி சமைத்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் தலா 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது
    புதுடெல்லி:

    ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் அமீர் மாலிக் என்ற மாணவர் வளாகத்தில் நிர்வாகத்துறை கட்டடிடத்திற்கு அருகில் பிரியாணி சமைத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 27 ம் தேதி துணை வேந்தரை பார்ப்பதற்கு அனைவரும் காத்திருக்கும் போது இவர் சமைத்துள்ளார்.


    இதுகுறித்து அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து நடத்திய விசாரணையில் மாணவர்கள் பிரியாணி சமைத்து உண்டது கண்டுபிடிக்கப்பட்டது.



    இந்நிலையில், மாணவர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று நிர்வாகத்தினர் தண்டனை வழங்கினர். இன்னும் 10 நாட்களில் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் இத்தகைய செயலை நிர்வாகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எதிர்காலத்தில் மாணவர்கள் இது போன்ற ஒழுக்ககேடான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×