search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனி சந்திப்பு
    X

    பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனி சந்திப்பு

    அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ள இத்தாலி நாட்டு பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனி டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    டெல்லி:

    இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனி தனது மனைவி எமானுல்லாவுடன் இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இன்று காலை அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, பாலோ ஜென்ட்டிலோனி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.



    முதலில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ்ஜை சந்தித்து பேசிய ஜென்ட்டிலோனி, பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே உள்ள பல்வேறு முக்கிய விவாகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    கடந்த 2012-ம் ஆண்டு கேரளாவில் இரண்டு இத்தாலி கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் விழுந்த நிலையில், தற்போது  அவர்களை விடுவிப்பது குறித்து பாலோ ஜென்ட்டிலோனி பேசுவார் என கூறப்படுகிறது.



    ஜென்ட்டிலோனியுடன் இத்தாலி நாட்டின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 15 சி.இ.ஓ. வின் பிரதிநிதிகள் வந்துள்ளனர். இவர்கள் இந்திய சி.இ.ஓ.க்களுடன் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி - பாலோ ஜென்ட்டிலோனி பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
    Next Story
    ×