search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாஜ்மகால் நிலத்தை, ஷாஜகான் கட்டாயப்படுத்தி கைப்பற்றினார்: சுப்பிரமணியசாமி
    X

    தாஜ்மகால் நிலத்தை, ஷாஜகான் கட்டாயப்படுத்தி கைப்பற்றினார்: சுப்பிரமணியசாமி

    ஜெய்ப்பூர் மன்னரிடம் இருந்து தாஜ்மகால் நிலத்தை, ஷாஜகான் கட்டாயப்படுத்தி கைப்பற்றியதாக சுப்பிரமணியசாமி புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
    ஆக்ரா:

    உலக அதிசயமான தாஜ்மகால் குறித்து சமீபகாலமாக சர்ச்சை கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    தாஜ்மகால் இந்திய கலாச்சாரத்தின் சின்னம் இல்லை என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார். மேலும் உத்தரபிரதேச மாநில அரசு சுற்றுலா பட்டியலில் இருந்தும் தாஜ்மகால் நீக்கப்பட்டது.

    உத்தரபிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சாம் கூறும் போது, தாஜ்மகால் இந்தியாவின் களங்கம். இதற்கு இந்திய வரலாற்றில் இடமில்லை என்று தெரிவித்தார்.

    அதே போல் பாரதீய ஜனதா எம்.பி. வினைகத்தியார் கூறும் போது, இந்து கோவிலை இடித்து விட்டு அதில் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது என்றார்.

    இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த நிலையில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி புதிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    தாஜ்மகால் கட்டப்படும் போது அந்த இடம் ஜெய்ப்பூர் மன்னருக்கு சொந்தமானதாக இருந்தது. அதை கட்டாயப்படுத்தி ஷாஜகான் கைப்பற்றினார். இதற்கு ஈடாக 40 கிராமங்கள் ஜெய்ப்பூர் மன்னருக்கு வழங்கப்பட்டது.

    ஆனால், தாஜ்மகாலுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை ஒப்பிடும் போது, அதற்கு ஈடாக அந்த 40 கிராமங்கள் இல்லை. மேலும் தாஜ்மகால் இருந்த இடம் கோவில் நிலமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் கோவிலை இடித்து விட்டு தாஜ்மகாலை கட்டினார்களா? என்பது தெரியவில்லை.



    ஜெய்ப்பூர் மன்னரிடம் இருந்து கட்டாயப்படுத்தி நிலத்தை கைப்பற்றியது சம்பந்தமாக பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவேன்.

    முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் சுமார் 40 ஆயிரம் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால், 3 கோவில்களை மட்டும்தான் திருப்பி கேட்கிறோம்.

    அயோத்தி ராமர் கோவில், மதுரா கிருஷ்ணர் கோவில், வாரணாசி காசி விசுவநாதர் கோவில் ஆகியவற்றை தர வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தேசிய வாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறும் போது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர் அது பாரதீய ஜனதா பிரசாரமாக மாறுகிறது. தாஜ்மகால் பிரச்சினையும் இப்படித்தான் வந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம்கான் கூறும் போது, பாபர் மசூதியை இடித்தது போல் தாஜ்மகாலையும் இடிப்பதற்கு சதித்திட்டம் நடக்கிறது என்றார்.
    Next Story
    ×