search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் 34 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி - 4 பேர் கைது
    X

    போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் 34 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி - 4 பேர் கைது

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் போலியான நில ஆவணங்கள் மூலம் வங்கியில் 34 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய கும்பலைச் சேர்ந்த 4 பேரை பல ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கபு மற்றும் துர்கா பிரசாத் ஆகிய இருவரும் கடந்த 2007ம் ஆண்டு அரசு அதிகாரி ஜி.எல்.கணேஷ்வரா என்பவரின் உதவியுடன் போலியான நில ஆவணங்கள் தயாரித்தனர். வேப்பகுண்டா பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் பெயரில் இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த போலி ஆவணங்கள் மூலம் 2014-ம் ஆண்டு வங்கியில் 34 கோடி ரூபாய் கடன் வாங்கினர். அதனை திருப்பிக் கொடுக்காததால் வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அது போலி ஆவணம் என்ற உண்மை தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தலைமறைவாகினர்.

    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கடன் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரில் நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×