search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.8.36 கோடி செலவில் தங்க காசு மாலை வழங்கிய பக்தர்
    X

    திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.8.36 கோடி செலவில் தங்க காசு மாலை வழங்கிய பக்தர்

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோயில் கொண்டுள்ள ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் 8.36 கோடி ரூபாய் செலவில் தங்க மாலையை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோயில் கொண்டுள்ள ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் 8.36 கோடி ரூபாய் செலவில் தங்க மாலையை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பக்தர்கள் தங்களின் மனக்குறைகள் நீங்க திருமலையில் குடிகொண்டுள்ள ஏழுமலையான நாடி வருகின்றனர். மனக்குறைகளை தீர்த்து வைக்கும் பெருமாளுக்கு பலவிதமான காணிக்கைகள் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ராமலிங்கம் ராஜு என்ற பக்தர், திருப்பதியில் உறையும் ஏழுமலையானுக்கு 8.36 கோடி ரூபாய் மதிப்பிலான சகஸ்ர நாம மாலை எனும் தங்க காசு மாலையை இன்று காணிக்கையாக செலுத்தினார்.

    அந்த தங்க மாலை சுமார் 28 கிலோ எடை கொண்டது. 1008 தங்க காசுகளால் உருவாக்கபப்பட்டது. ஒவ்வொரு காசிலும் பெருமாளின் 1008 பெயர்கள் பொறித்துள்ளார்.

    ஆந்திரப்பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கோயில் நிர்வாகத்தினரிடம் தங்க காசுமாலையை ஒப்படைத்தார்.

    திருப்பதி கோயிலில் தற்போது பிரமோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×