search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கிம்: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
    X

    சிக்கிம்: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

    சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட வீடுகளில் சிக்கிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காங்டோக்:

    சிக்கிம் மாநிலத்தின்  தென்மாவட்டத்தில் உள்ள குர்பைஸி என்ற இடத்தில்  இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு வீடு பூமிக்குள் புதைந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

    கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள மேல் போக்குராங் பகுதியிலும் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு சிறுமி மற்றும் அவரது தாயார் உயிரிழந்தனர்.

    மாவட்ட நிர்வாகத்தினர்  இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்புப்படையின் உதவியுடன் மீட்டனர்.



    Next Story
    ×