search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிராமணர்களுக்கு இடம் அளிக்க முடிவு: மத்திய மந்திரி சபை மீண்டும் மாற்றம்
    X

    பிராமணர்களுக்கு இடம் அளிக்க முடிவு: மத்திய மந்திரி சபை மீண்டும் மாற்றம்

    பிரமாணர்களுக்கு மத்திரி பதவி அளிக்கும் வகையில் மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபையில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த அனில்மாதவ்தேவ் அங்கம் வகித்து வந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அனில்மாதவ்தேவ் பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் இறந்தற்கு பிறகு அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு புதிதாக மந்திரி பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

    மத்தியபிரதேசத்தை பொறுத்தவரை பிரமாணர் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவுக்கு உள்ளனர். அவர்கள் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகவும் இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதோடு ராஜஸ்தான், சதீஷ்கார் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    மத்தியபிரதேசம், உத்தரபிரதேசத்தில் உயர்ஜாதியாக உள்ள தாகூர் சமூகத்தினருக்கு மத்திய மந்திரிசபையில் அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் தாகூர் சமூகத்தினர் தான் முதல்-மந்திரியாவுக்கும் இருக்கிறார்கள். ஆனால் அந்த முக்கியத்துவம் பிரமாணர் சமூகத்தினருக்கு இல்லை என்ற குறைபாடு மத்தியபிரதேசத்தில் இருக்கிறது. மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரியாக இருக்கும் சிவராஜ்சிங் சவுகான் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்.

    எனவே மத்திய மந்திரிசபையில் பிராமணர்களுக்கு கூடுதல் இடங்கள் கொடுக்கவும், அதிலும், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கட்சித்தலைவர் அமித்ஷாவும் இந்த கருத்தை கூறியிருக்கிறார்.

    எனவே பிரமாணர்களுக்கு மத்திரி பதவி அளிக்கும் வகையில் மத்திய சபை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த மாற்றத்தின்போது ஐக்கிய ஜனதா தளத்தையும் மந்திரிசபையில் சேர்த்துக் கொள்ள இருப்பதாக தெரிகிறது.
    Next Story
    ×