search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளப் பெருக்கால் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெயில் சேவை நிறுத்தம்: ரெயில்வே அறிவிப்பு
    X

    வெள்ளப் பெருக்கால் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெயில் சேவை நிறுத்தம்: ரெயில்வே அறிவிப்பு

    வெள்ளப் பெருக்கால் வடகிழக்கு மாநிலங்களில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வடகிழக்கு ரெயில்வேயின் செய்தி தொடர்பாளர் பிரணாப் ஜோதி சர்மா கூறுகையில், “கடந்த 72 மணி நேரமாக மேற்கு வங்காளம், பீகார், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து, அந்த மாநிலங்கள் வழியாக செல்லும் ரெயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதிகள் வழியாக செல்லும் 11 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் அனைத்து ரெயில்களும் புதன்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.



    நேற்று மட்டும் 22 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் 14 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ரெயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

    ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணங்களை திருப்பி அளிக்கும் வகையில், பல்வேறு ரெயில் நிலையங்களில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×