search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லேண்டிங் கியர் மாற்றாமல் நடுவானில் பறந்த விமானம்: பெண் பைலட்டுகள் பணிநீக்கம்
    X

    லேண்டிங் கியர் மாற்றாமல் நடுவானில் பறந்த விமானம்: பெண் பைலட்டுகள் பணிநீக்கம்

    கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு 100 பேரை ஏற்றி சென்ற விமானத்தில் லேண்டிங் கியர்ச மாற்றாத 2 பெண் பைலட்டுகளை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
    மும்பை:

    ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த ஜூலை 22-ம் தேதி 100 பயணிகளுடன் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு சென்றது. இந்த விமானத்தை இரண்டு பெண் பைலட்டுகள் இயக்கினர். 
     
    மும்பை நோக்கி நடுவானில் பறந்த விமானத்தில் வழக்கத்திற்கு மாறாக திடீரென எரிபொருள் அதிவேகமாக குறைய துவங்கியுள்ளது. விமானத்தின் லேண்டியங் கியர் வானத்தில் குறிப்பிட்ட அளவு சென்றதும் மாற்றப்பட வேண்டும். இவ்வாறு மாற்றும் போது விமானத்தின் சக்கரங்கள் விமானத்தினுள் இழுக்கப்பட்டு விடும். 

    ஆனால் கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய விமானத்தில் பெண் பைலட்டுகள் லேண்டிங் கியர் மாற்ற மறந்துவிட்டனர். லேண்டிங் கியர் மாற்றாததால் விமானத்தில் எரிபொருள் அதிவேகமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக விமானம் நாக்பூர் நகருக்கு திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

    இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் 2 பெண் பைலட்டுகளை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×