search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் தொற்றுநோய்களுக்கு ஆறு மாதங்களில் 1010 பேர் பலி- மத்திய அரசு தகவல்
    X

    இந்தியாவில் தொற்றுநோய்களுக்கு ஆறு மாதங்களில் 1010 பேர் பலி- மத்திய அரசு தகவல்

    இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் தொற்றுநோய்களால் 1010 பேர் பலியாகியிருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மந்திரி நட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொற்று நோய்களின் தாக்கத்தால் இந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி வரை 1010 பேர் இறந்துள்ளனர். அதில் 632 பேர் பன்றிக் காய்ச்சலாலும், 279 பேர் ஏடீஸ் கொசுவால் ஏற்படும் காய்ச்சலாலும் மற்றும் 60 பேர் ஜப்பானிய மூளையழற்சி நோயாலும் இறந்துள்ளனர். மேலும் 22 பேர் டெங்கு காய்ச்சலாலும், 17 பேர் மலேரியா காய்ச்சலாலும் இறந்துள்ளனர். மொத்தம் 1010 பேர் இந்த தொற்று நோய்களால் இறந்திருப்பதாக ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தொற்றுநோய்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 25,354 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 5,510 சமூக சுகாதார நிலையங்களும் தற்போது செயல்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×