search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச ரான்சம்வேர் தாக்குதல்: மும்பை துறைமுக கணினிகள் முடங்கின
    X

    சர்வதேச ரான்சம்வேர் தாக்குதல்: மும்பை துறைமுக கணினிகள் முடங்கின

    சர்வதேச ரான்சம்வேர் தாக்குதலால் மும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தின் முனையங்களின் பணிகள் முழுமையாக முடங்கின. ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட ரான்சம்வேர் பல்வேறு நாடுகளை தொடர்ந்து இந்தியாவையும் பாதித்துள்ளது.
    மும்பை:

    சர்வதேச ரான்சம்வேர் தாக்குதலால் மும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தின் முனையங்களின் பணிகள் முழுமையாக முடங்கின. ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட ரான்சம்வேர் பல்வேறு நாடுகளை தொடர்ந்து இந்தியாவையும் பாதித்துள்ளது.

    ஏபி மௌலெர்-மெர்ஸ்க் நிறுவனம் சர்வதேச அளவில் பாதிப்பில் சிக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் மும்பை துறைமுகத்தில் மட்டும் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமான கன்டெயினர் யுனிட்களை கொண்டுள்ளது.  

    ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை கையாளும் கணினிகள் முழுமையாக முடங்கி போனதால் முக்கிய பணிகளை நாங்களாகவே செய்ய முயற்சித்து வருகிறோம் என ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக பிரச்சனையை எதிர்கொள்ள துறைமுகம் சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன, எனினும் சிலவற்றில் கணினிகள் உதவியின்றி மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  



    முன்னதாக உக்ரைன் நாட்டின் மின் துறை அலுவலகங்கள், வங்கிகள், விமான நிலையம் மற்றும் அரசு அலுவலக கணினிகளை புதிய ரான்சம்வேர் ஒன்று தாக்கியுள்ளது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும் புதிய ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஹேக்கிங் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் இதுவரை அறியப்படவில்லை. புதிய ரான்சம்வேர் செர்நோபிள் அணு உலையையும் பாதித்துள்ளது என்றும் விமான நிலைய முணையம் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களும் ரான்சம்வேரின் இலக்காகியுள்ளன.

    இதுகுறித்து வெளியான தகவல்களில் புதிய ரானசம்வேர், ஏற்கனவே வானாகிரை ரான்சம்வேர் வைரஸ்-ஐ வெளியிட்டவர்கள் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
    Next Story
    ×