search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியான ராணுவ ஆட்சேர்ப்பு கும்பல் சிக்கியது: ரூ.1.76 கோடி பணம் பறிமுதல்
    X

    போலியான ராணுவ ஆட்சேர்ப்பு கும்பல் சிக்கியது: ரூ.1.76 கோடி பணம் பறிமுதல்

    ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்திற்கு ஆட்களை சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றிய கும்பல், கத்தை கத்தையாக பணத்துடன் சிக்கியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவம் நடத்திய ஆள்சேர்ப்பு முகாம்களில் உடல் தகுதிப்பெற்ற இளைஞர்களிடம் ஒரு கும்பல் கட்டாயம் பணியில் சேர்த்து விடுவதாக பணம் வாங்கி மோசடி செய்து உள்ளது. இளைஞர்களின் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி உள்ளது.

    பல ஆண்டுகளாக நடந்த இந்த மோசடி தொடர்பான தகவல்கள் தெரியவந்ததும், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராணுவத்தின் உளவுப்பிரிவு ஜெய்ப்பூரில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது மோசடி கும்பல் சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மோசடி கும்பல் ஒவ்வொரு இளைஞர்களிடமும் ரூ. 2 லட்சத்திற்கு மேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அர்ஜூன் சிங், நாத் சிங் ரத்தோர், சுனில் வியாஸ் மற்றும் மகேந்திர சிங் என நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உமேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

    அர்ஜூன் சிங்தான் இதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. அர்ஜூன் சிங்கிடம் இருந்து இளைஞர்களின் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×