search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினியால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி: மகளிர் அணி செயலாளர் சங்கீதா
    X

    ரஜினியால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி: மகளிர் அணி செயலாளர் சங்கீதா

    ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி மாவட்ட செயலாளராக தலைவரால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி என்று மகளிர் அணி செயலாளர் சங்கீதா கூறினார்.

    ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட செயலாளராக சோளிங்கர் என்.ரவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    மாவட்ட இணை செயலாளராக ஆர்.நீதி என்ற அருணாசலம், மாவட்ட துணை செயலாளர்களாக வாணியம்பாடி ஜி.கணபதி, பொய்கை பி.ராஜன்பாபு, முகமது எஸ்.கலிபா அறிவிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் அணி செயலாளராக பி.அருண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக சி.சங்கீதாவை ரஜினி தேர்வு செய்து பதவி கொடுத்துள்ளார். இவர் வக்கீலுக்கு படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சோளிங்கர் தொகுதி ரஜினி மக்கள் மன்றக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் என்.ரவி தலைமை தாங்கி பேசியதாவது:-

    நகரம், ஒன்றியம், வார்டு, தொகுதி வாரியாக உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறோம். அதில் 20 சதவீத அளவுக்கு மேல் உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு கட்சியில் வார்டு, நகரம், ஒன்றியம், தொகுதி மாவட்ட அளவில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும் ஊராட்சி தோறும் உள்ள பிரச்சனைகள் குறித்து மன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். சோளிங்கர் தொகுதியில் மட்டும் 60 ஆயிரம் பேரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்றார்.

    ரஜினி மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி கூறியதாவது:-

    ரஜினிக்கு பெருமை சேர்த்தது வேலூர் மாவட்டம் ஜனவரி 31-ந்தேதிக்குள் வேலூர் மாவட்டத்தில் 7 லட்சம் பேரை ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வார்டில் 200 உறுப்பினர்கள் இருந்தால் அந்த அமைப்பு அங்கீகரிக்கப்படும். அனைவரும் கட்டுக்கோப்பாக இருந்து செயல்பட வேண்டும். உண்மையாக உழைப்பவர்களை ரஜினி கைவிட மாட்டார் ரஜினிக்கு காவலாக நாங்கள் இருப்போம் என்றார்.

    வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள வக்கீல் சங்கீதா கூறியதாவது:-

    ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி மாவட்ட செயலாளாராக அறிவிக்கப்பட்டதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் தலைவரால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி. கடவுள் தலைவரிடம் கூறியதன் பேரில் எனக்கு பொறுப்பு தந்துள்ளார் என கருதுகிறேன்.

    ஒரு காவலராக என்னை தேர்வு செய்துள்ளார். அவர் சொல்கிற வழியை நான் செயல்படுத்துவேன்.

    நான் சின்ன வயதில் இருந்தே ரஜினி ரசிகை கோவை சட்ட கல்லூரியில் சட்டம் படித்தேன். கடந்த 15 ஆண்டுகளாக வேலூர் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறேன்.

    வேலூரில் நடந்த ரஜினி மன்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன். இதனால் நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வக்கீல் சங்கீதா வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. ஆபிஸ் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் விஜய் சாப்ட்வேர் என்ஜினீயர் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. #tamilnews

    Next Story
    ×