search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டு வரி உயர்வு: கம்பம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    வீட்டு வரி உயர்வு: கம்பம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் கம்பம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கம்பம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் கம்பம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அஜ்மல்கான் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, பரமையா, ஆதிமூலம், செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணை தலைவர் சுந்தரராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன், மாநிலக்குழு உறுப்பினர் மூக்கையா ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கம்பம் நகரில் வீட்டுவரி பன் மடங்கு உயர்த்திட நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக்கோரியும், தேனி மாவட்டத்திலுள்ள மின்சாரம், போக்குவரத்து, துப்புரவு, டாஸ்மாக், அண்ணா கூட்டுறவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட் துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட கோரியும், காமயகவுண்டன்பட்டி கல்லுடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காத்திட சங்கிலிக்கரடு கல்குவாரியை ஏலம் விட வேண்டும்.

    துப்புரவு ஒப்பந்த பணிகளை நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களே ஏற்று நடத்த வேண்டும். ஜவுளி தொழிலாளர்களுக்கு தேசியமையமாக்கப்பட்ட வங்கிகளில் சிறுதொழில் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் தெரு வியபாரிகள்,கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏஐடியூசி சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×