search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவொற்றியூரில் தரையில் புதைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாயால் வீடுகளில் விரிசல்
    X

    திருவொற்றியூரில் தரையில் புதைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாயால் வீடுகளில் விரிசல்

    திருவொற்றியூரில் தரையில் புதைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாயால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சி.பி.சி.எல். தொழிற் சாலைக்கு கடற்கரையோர கிராமங்கள் வழியாக கச்சா எண்ணை குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.

    இதில் திருவொற்றியூர் குப்பம், பட்டினத்தார் கோவில் தெரு, கிளிஜோசியம் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு கீழ் தரைப்பகுதியில் கச்சா எண்ணை குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பதிக்கப்பட்ட இந்த குழாயால் கிளிஜோசியம் நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    உதவி கமி‌ஷனர் ரகுராம், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி னர். சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் தெரிவித்து நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×