search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
    X

    களக்காடு அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

    களக்காடு அருகே உள்ள கீழபத்தை சேர்ந்த பெண் மர்மகாய்ச்சலால் மரணமடைந்தள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழபத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி அம்மா பொன்னு. இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மா பொன்னு களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்சல் தீவிரமடைந்தது. இதையடுத்து கடந்த 11-ந் தேதி அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அம்மாபொன்னு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது கணவர் பழனிசாமி கூறும்போது:-

    அம்மா பொன்னிற்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவரை களக்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறி சிகிச்சையளித்தனர். ஆனால் அங்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் நெல்லை அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தோம். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே களக்காடு அருகே உள்ள நெடு விளையை சேர்ந்த 5 வயது சிறுவன் மற்றும் தெற்கு புளியங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று களக்காடு அருகே உள்ள கீழபத்தை சேர்ந்த அம்மாபொன்னு மர்மகாய்ச்சலால் மரணமடைந்தள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே களக்காடு பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×