search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண்மை விரிவாக்க மையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
    X

    வேளாண்மை விரிவாக்க மையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

    புதுச்சத்திரம் வேளாண்மை விரிவாக்க மையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கடந்த 5 ஆண்டுகளாக வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தினை புதன்சந்தைக்கு மாற்ற வேளாண்மை துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடமாற்றத்தை கைவிட வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று வேளாண்மை விரிவாக்க மையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து புதுச்சத்திரம் வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நவணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் புதுச்சத்திரம் வேளாண்மை விரிவாக்க மையத்தை புதன்சந்தைக்கு மாற்றினால் புதுச்சத்திரம் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சுமார் 7 கி.மீ. தூரம் வரை சென்று வேளாண் இடு பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் வேளாண்மை விரிவாக்க மையத்தினை புதன்சந்தைக்கு மாற்ற கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் இம்மையத்தை மாற்ற அதிகாரிகள் இனியும் முற்பட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் கூறினர்.

    இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுசீதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கவுதம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரசாமி, ஒன்றிய தலைவர் யுவராஜ் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    Next Story
    ×