search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    38 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
    X

    38 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர்மட்டம் 38 அடியை எட்டியுள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பருவ மழை பொய்த்து போனதால் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை நீடித்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 2156 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 127.40 அடியாக உள்ளது. குடிநீருக்காக 1400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 37.96 அடியாக உள்ளது. அணைக்கு 209 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 40 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் தேக்க வருகிற 46 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 40 கன அடி நீராக உள்ளது.

    பெரியாறு 3.6, தேக்கடி2.4, கூடலூர் 2.5. உத்தமபாளையம் 2.2. மி.மீ. அளவு மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×