search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள்
    X

    ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நாளை மறுநாள் (15-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்ட சுவார்ட்சு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நாளை மறுநாள் (15-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்ட சுவார்ட்சு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

    கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நாளை மறுநாள் (15-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்ட சுவார்ட்சு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

    கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். அவர்களைக் கல்லூரியே தேர்வு செய்து அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் முதல்வரிடமிருந்து உரிய படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சிஉதவி இயக்குநரிடம் கொடுக்க வேண்டும்.

    மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகைப்பதிவு செய்ய வேண்டும். கவிதைப்போட்டி காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், கட்டுரைப் போட்டி பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், பேச்சுப்போட்டி பிற்பகல் 2.30 மணி முதல் போட்டி முடிவுறும் வரையிலும் நடைபெறும். அனைத்து மாணவர்களுக்கும் போட்டி பொதுவானதாகும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×