search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியாகிகள் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
    X

    தியாகிகள் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.12,000ல் இருந்து ரூ.13,000 ஆக உயர்த்தப்படுவதாக, சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
    சென்னை:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    முதலமைச்சர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:-

    உழவர் பாதுகாப்பு திட்டத்தில், இயற்கை மரணமடையும் விவசாயிகளுக்கான நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

    நீராபானம் திட்டம் மூலம், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயரும். தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1,519 ஏரிகளில் ரூ.100 கோடி செலவில் ஏரிகள் சீரமைக்கும் பணி நிறைவடைய உள்ளது. 

    சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.12,000ல் இருந்து ரூ.13,000 ஆக உயர்த்தப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின்  குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.6000ல் இருந்து ரூ.6500 ஆக உயர்த்தப்படுகிறது.
    Next Story
    ×