search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. தெய்வநாயகம் மரணம்
    X

    புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. தெய்வநாயகம் மரணம்

    ஆதிதிராவிடர்கள் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. தெய்வநாயகம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் தொகுதியில் 1990-ம் ஆண்டு ஜனதா தளம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தெய்வநாயகம். அவர் சமீப காலமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார்.

    மேலும் பூர்வீக ஆதிதிராவிடர் இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்த தெய்வநாயகம் ஆதிதிராவிடர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

    இவரது சொந்த ஊரான பாகூர் அருகே உள்ள பின்னாச்சிக்குப்பத்தில் உள்ள தோட்டத்தில் பங்களா வீட்டில் இன்று தங்கி இருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். அவருக்கு வயது 55.

    தெய்வநாயகம் அரசு ஊழியராக பணியாற்றி வந்தவர். தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசு பதவியில் இருந்து விலகினார். ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இரு கால்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு கல்பனாதேவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    அவரது உடல் நெல்லித்தோப்பு கான்வென்ட் வீதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×