search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் கலந்தாய்வு: முதல் 10-ல் 9 பேர் அண்ணா பல்கலைகழகத்தை தேர்வு செய்தனர்
    X

    என்ஜினீயரிங் கலந்தாய்வு: முதல் 10-ல் 9 பேர் அண்ணா பல்கலைகழகத்தை தேர்வு செய்தனர்

    என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது. முதல் 10-ல் 9 பேர் அண்ணா பல்கலைகழகத்தை தேர்வு செய்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 518 என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

    இதற்காக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதில் தொழிற்கல்வி மாற்றுத் திறனாளி மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்துவிட்டது.

    இந்த நிலையில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.

    முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 900 மாணவ- மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

    இந்த கலந்தாய்வை தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார். இன்று நடந்த கலந்தாய்வில் 200 முதல் 197 வரையிலான கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளில் 2900 பங்கேற்றனர்.

    முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு உயர் கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவால், கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி சான்றிதழை வழங்கினார்.

    ஸ்ரீராம் என்ற மாணவர் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்தார். அவர் அண்ணா பல்கலைகழத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை தேர்வு செய்தார்.

    முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 9 பேர் அண்ணா பல்கலைக் கழகத்தை தேர்வு செய்தனர். 5-வது இடத்தை பிடித்த பிரீத்தி என்ற மாணவர் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியை தேர்வு செய்தார். அவர் கம்ப்யூட்டர்அறிவியல் பாடத்தை தேர்வு செய்தார்.

    முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு-

    1. ஸ்ரீராம் (அண்ணா பல்கலைக்கழகம், கம்ப்யூட்டர் அறிவியல்)

    2.அரிவிஷ்ணு, (அண்ணா பல்கலைக்கழகம், எலக்ட்டிரிக்கல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ்)

    3. சாய்ராம், (அண்ணா பல்கலைக்கழகம், கம்ப்யூட்டர் அறிவியல்)

    4. யுவனேஷ், (அண்ணா பல்கலைக்கழகம், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகே‌ஷன்)

    5. பிரித்தி (பி.எஸ்.ஜி. கல்லூரி, கம்ப்யூட்டர்)

    6. சதீஷ்சவார் (அண்ணா பல்கலைக்கழகம், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகே‌ஷன்)

    7. முகமது அர்‌ஷத் (அண்ணா பல்கலைக்கழகம், கம்ப்யூட்டர் அறிவியல்)

    8. நிதிஷ் (அண்ணா பல்கலைக் கழகம், சிவில்)

    9. சித்தார்த் (அண்ணா பல்கலைக்கழகம், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகே‌ஷன்)

    10 காவியா ( (அண்ணா பல்கலைக்கழகம் கம்ப்யூட்டர் அறிவியல்)

    ஆகஸ்டு 11-ந்தேதிவரை இந்த கலந்தாய்வு நடக்கிறது. இதற்காக சுமார் 1.38 லட்சம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×