search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் நிலையங்களில் விரைவில் டிக்கெட் பரிசோதிக்கும் தானியங்கி கதவுகள்
    X

    ரெயில் நிலையங்களில் விரைவில் டிக்கெட் பரிசோதிக்கும் தானியங்கி கதவுகள்

    மெட்ரோ ரெயிலைப் போல், ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் பரிசோதிக்கும் தானியங்கி கதவுகளை பொருத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    ரெயில் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதிக்க டிக்கெட் பரிசோதகர்கள் போதுமான அளவில் இல்லை.

    எனவே டிக்கெட்டுகளை தானியங்கி முறையில் பரிசோதிக்கும் முறையை அமுல்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. பயணிகள் டிக்கெட்டுகளை தானியங்கி கதவில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேனர் கருவியில் காண்பிக்க வேண்டும். பார் கோடு உதவியுடன் டிக்கெட்டை பரிசோதித்த பிறகு கதவு தானாக திறந்து வழிவிடும்.

    இதே தொழில்நுட்பத்தை ரெயில்வேயும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. சோதனை முயற்சியாக டெல்லியில் பிரார் சதுக்கம் ரெயில் நிலையத்தில் இன்னும் 3 மாதத்தில் இந்த ஸ்கேனர் பொருத்தப்பட்ட தானியங்கி கதவு பொருத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்து மற்ற ரெயில் நிலையங்களிலும் இந்த தானியங்கி கதவுகளை பொருத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதோடு, ஓசி பயணத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
    Next Story
    ×