search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே பொறுமையாக இருந்தால் கிடைக்கும் வெகுமதி
    X

    பெண்களே பொறுமையாக இருந்தால் கிடைக்கும் வெகுமதி

    ஒருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது கேட்பவருக்கும் தன்னுடைய அனுபவங்களை சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது இயல்பானது.
    மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் பேச்சில் குறுக்கீடு செய்வது நல்ல பழக்கமல்ல. முதலில் அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை முழுமையாக காதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே மனதில் தோன்றுவதை உடனே சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கீடு செய்வது உங்களை அறியாமலேயே நடக்கும் விஷயமாக இருக்கலாம்.

    ஆனால் அது பேசிக்கொண்டிருப்பவருக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். அவர்கள் சொல்ல வந்த விஷயத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும். குறுக்கீடு தொடரும் பட்சத்தில் ஒருவர் சொல்வதை இன்னொருவர் கேட்கும் மனோபாவம் இருக்காது. இருவரும் தங்களுடைய கருத்துக்களை நியாயப்படுத்தி பேசும் மனநிலையில்தான் இருப்பார்கள்.

    ஒருவர் பேசி முடிப்பதற்கு முன்பாகவே யூகத்தின் அடிப்படையில் மற்றவர் கருத்து சொல்லும் சூழலும் உருவாகும். அதுவே சிலசமயங்களில் இருவருக்குள்ளும் சச்சரவுகளை ஏற்படுத்தி விடும். ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போதே அவர் பேசுவதை முழுமையாக கேட்க வேண்டும், அவர் பேசி முடிக்கும்வரை பொறுமை காக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மாறிவிட வேண்டும்.



    குறுக்கிட வேண்டும் என்ற எண்ணம் உதித்தாலும் மனதை கட்டுப்படுத்த வேண்டும். ஒருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது கேட்பவருக்கும் தன்னுடைய அனுபவங்களை சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது இயல்பானது. அதனை கட்டுப்படுத்தி அவர் சொல்லுகின்ற விஷயத்தை அக்கறையுடன் கேட்கும் மனோபாவத்துக்கு மாறுங்கள். அவர் உற்சாகத்துடன் மேலும் பல தகவல்களை சொல்வதற்கு ஊக்கப்படுத்திடுங்கள்.

    அப்படி நீங்கள் அக்கறையுடன் அவருடைய பேச்சை கவனிக்கும்போது அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச்சை அங்கீகரிக்கிறீர்கள் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்படும். நீங்கள் சொல்வதை ஆர்வமுடன் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தானாகவே உருவாகிவிடும். நீங்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்ததற்கு ஏற்ப அவரும் உங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து நீங்கள் சொல்வதை பொறுமையாக கேட்பார்.
    Next Story
    ×