search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சருமத்தை பாதுகாக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
    X

    சருமத்தை பாதுகாக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்

    சருமத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் கற்றாழையைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.
    சருமத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

    * சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.

    * ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன்றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.

    * இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.



    * உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.

    * இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

    * வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.
    Next Story
    ×