search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கைக்குத்தல் அவல் உருண்டை செய்வது எப்படி
    X

    கைக்குத்தல் அவல் உருண்டை செய்வது எப்படி

    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் கைக்குத்தல் அவல் உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    சிவப்பு கைக்குத்தல் அவல் - ஒரு கப், 
    பல்லாக நறுக்கிய தேங்காய் - ஒரு டீஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, 
    பாகு வெல்லம் - முக்கால் கப், 
    வெண்ணெய் - அரை டீஸ்பூன், 
    நெய், எண்ணெய் - தலா 50 கிராம்.



    செய்முறை:  

    தேங்காயை நெய்யில் வறுத்து வைக்கவும்.

    நெய், எண்ணெயை ஒன்றுசேர்த்து வாணலியில் ஊற்றி சூடாக்கவும். அதில் சுத்தம் செய்த அவலை சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும். 

    வறுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த தேங்காய், வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். 

    பாகு பதம் வந்தவுடன் அதை அவல் கலவையில் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

    சூப்பரான கைக்குத்தல் அவல் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×